பொது செய்தி

இந்தியா

இந்திய - சீன எல்லையில் நடந்தது என்ன?: செயற்கைகோள் படம் வெளியீடு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நடந்தததை விளக்கும் விதமாக செயற்கைகோள் வரைபடம் வெளியாகியுள்ளது.கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள்
Ladakh Clash, Border, Satellite Images, India, China, Galwan Valley clash, border dispute, லடாக், எல்லை, இந்தியா, சீனா, மோதல், செயற்கைகோள், படம், வெளியீடு

புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நடந்தததை விளக்கும் விதமாக செயற்கைகோள் வரைபடம் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உயிரிழந்தவர்கள் குறித்து அந்நாட்டு அரசு, எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மோதல் நடந்தது தொடர்பான செயற்கைக்கோள் வரைபடங்கள் வெளியாகியுள்ளது.


latest tamil news


ராய்ட்டர்ஸ் வெளியிட்ட புதிய செயற்கைகோள் படங்கள் எல்லைபகுதியில் சீனப் பக்கத்தில் ஒரு பெரிய கட்டமைப்பை இருப்பதை காட்டுகிறது. இந்த மோதல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ள PP-14 அல்லது ரோந்து பகுதி 14 எனப்படும் ஒரு இடத்தில் நடந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள இந்தியாவின் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம். இந்த 15,000 அடி உயர இமயமலை பகுதியில் தான் ஜூன் 15 அன்று நூற்றுக்கணக்கான வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.


latest tamil news


மோதலின் போது, இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால், முட்கம்பிகளால் மூடப்பட்டிருந்த கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் தொடங்கிய இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. ராணுவ வீரர்கள் ஒரு உயரமான பாறைகளில் இருந்து பனிகட்டிகளுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதை கல்வான் நதி செயற்கைக்கோள் வரைபடங்கள் விளக்குகிறது. அதனை தொடர்ந்து, சீன ஆம்புலன்ஸ்கள் அப்பகுதியில் இருந்து காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதை இந்திய வீரர்கள் கவனித்துள்ளனர். பின்னர் ஹெலிகாப்டர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

தவுலத் பெக் ஓல்டியில் இருந்து வடக்கு டார்பூக்குடன் தெற்கு நோக்கி இணையும் இந்தியாவின் புதிய சாலையை குறிவைத்தே சீன ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-ஜூன்-202014:57:23 IST Report Abuse
தமிழ்வேள் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தடை செய்யப்படவேண்டும்.. சீன ஆதரவுக் கட்சிகள் ஈவு இரக்கம் பாராது மனிதத்தன்மையற்று நடத்தப்பட வேண்டும் ....உள்ளுக்குள்ளேயே இருந்து அழிக்கும் துரோகிகள் தேசப்பற்றற்ற அயோக்கிய அமைப்புகள் நபர்கள் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை.. இருந்தால் இந்தியனாக இருக்கவேண்டும் இல்லையேல் செத்து அழிய வேண்டும்.. எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.. இந்தியாவின் தெற்குப்பகுதியில் தேசத்துரோகிகள் மிக அதிகம் ...பகுத்தறிவு போர்வையில் மிக அதிகமான எண்ணிகையில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் முதலில் அழிக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
18-ஜூன்-202014:37:32 IST Report Abuse
unmaitamil இனியாவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தாய்நாட்டுக்கு எதிராகவும், எதிரிக்கு வக்காலத்து வாங்கும் எவரையும் தண்டிக்கும் அவசர சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் இந்தியா சுக்குநூறாக உடைந்து கயவர்களின் கையில் போய்விடும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-ஜூன்-202013:45:21 IST Report Abuse
elakkumanan இந்தியாவிற்கு எதிரிகள் உள்ளும் புறமும்.....நரிகள் வெளியே, துரோகிகள் உள்ளே...................இன்னும் கமிஸ்க்கு எனது மக்கள் ஒட்டு போடுகிறார்கள்..............................அறியாமை என்பதன் உச்சம் ....................வயிறு மட்டுமே முக்கியம் என்று வாழுபவர்கள் இந்தியாவில் அதிகம்..............அதிலும், டாஸ்மாக் மாநிலத்தில் மிக அதிகம்......................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X