அன்னிய முதலீடுகள் ஈர்ப்பதில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நியூயார்க்: 'கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் அதிக அளவு அன்னிய முதலீடுகளை ஈர்த்த நாடுகளில் இந்தியா 9வது இடத்துக்கு முன்னேறியது' என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டுக்கான உலக முதலீட்டு அறிக்கை:கடந்த 2018ம் ஆண்டில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த 20 நாடுகளில் 3.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுடன் இந்தியா 12வது இடத்தில் இருந்தது. இதுவே 2019ம் ஆண்டில் 3.88 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து 9வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.வளர்ந்து வரும் ஆசிய பிராந்தியத்தில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. தற்போது கொரோனா வைரசால் உலகெங்கும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் இருந்து மீள்வதற்கான சிறந்த நடவடிக்கைகள் மற்றும் மிகப் பெரிய சந்தை உள்ளது போன்றவை இந்தியாவுக்கு சாதகமாக உள்லன. அதனால் இந்த ஆண்டில் இந்தியா அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும்.தெற்காசியாவில் செய்யப்படும் அன்னிய முதலீடுகளில் 70 சதவீதம் இந்தியாவிற்கே கிடைத்து வருகிறது. நடப்பு 2020ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்படும் அன்னிய முதலீடு சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் தெற்காசிய பிராந்தியத்தில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் மிகச் சிறப்பான இடத்தில் இந்தியா இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X