இந்தியா வெற்றி: உலக நாடுகளுக்கு பிரதமர் நன்றி| India's UNSC non-permanent seat: Modi thanks global community | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா வெற்றி: உலக நாடுகளுக்கு பிரதமர் நன்றி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (10)
Share
இந்தியா, ஐநா, ஐக்கிய நாடுகள், வெற்றி, உலக நாடுகள், பிரதமர் மோடி, நன்றி, India, UNSC, non-permanent seat, PM Modi, global community

புதுடில்லி: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது. இதில், இந்தியாவுக்கு ஆதரவு அளித்த உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியா உறுப்பினராக சர்வதேச சமூகம் அளித்த பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு, அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்படும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.




latest tamil news




ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 ஓட்டுகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. கனடா தோல்வியடைந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X