பொது செய்தி

இந்தியா

கொரோனா நெருக்கடியை நல்வாய்ப்பாக மாற்றும் இந்தியா: மோடி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Modi, Covid-19 in india, Opportunity, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, Imports, மோடி, கொரோனா, வாய்ப்பு, நிலக்கரி

புதுடில்லி: கொரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா, நல்வாய்ப்பாக மாற்றி வருவதாக பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றியதாவது:


latest tamil news


நிலக்கரித் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள, இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வணிக நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மட்டும் தொடங்கவில்லை. நிலக்கரித் துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கு வெளியே இதுவரை நிலக்கரி துறை இருந்து வந்தது. இதனால், வெளிப்படைத் தன்மையிலும் குறைபாடு இருந்தது.


latest tamil news


2014-ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது அந்தநிலை மாறியுள்ளது. மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நிலக்கரித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களை நாமே தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை இந்தியா, நல்வாய்ப்பாக மாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
18-ஜூன்-202017:09:12 IST Report Abuse
Tamilnesan காங்கிரஸ் ஆட்சியில் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை அடிக்கப்பட்ட நிலக்கரி ஊழல் என்னவாயிற்று? காணாமல் போன கோப்புகள் கதி என்ன? ஆக மொத்தம் அரசியல்வியாதிகள் இந்தியாவில் கொள்ளை அடிப்பார்கள். இந்த அவலங்களை தற்போதய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளாது. ஏனெனில், கொள்ளை போவது மக்கள் வரி பணமல்லவா வாழ்க இந்திய போலி ஜனநாயகம்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202015:22:56 IST Report Abuse
Tamilan உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இதனால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது . இதற்க்கு மருந்து கண்டுபிடிப்பதால் மட்டும் இது போன்ற பிரச்சினையை முழுவதுமாக தீர்த்துவிடமுடியாது . இதில் பாதிக்கப்பட்டவர்கள் மீள இனியும் சில வருடங்கள் ஆகலாம். இவர்கள் இப்படி எதையாவது கூறி அவர்களை ஆறுதல் படுத்தலாம் . இந்த மாதிரி பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க அல்லது எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டாலும் உலகம் முழுவதும் இப்படி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விண்ணை முட்டுமளவுக்கு பரவாமல் தடுக்க இந்தியாவின் முந்தைய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் . அதெற்கெல்லாம் இவர்களுக்கு காரணம் தெரியவில்லை என்பதற்காக ஒதுக்கி தள்ளுவதை விட்டுவிட்டு அதற்கெல்லாம் இவர்களுக்கு காரணம் தெரியும் வரை கடைபிடிக்கவேண்டும் . தீண்டாமையை உலகமெல்லாம் சட்டமாக்கி அனைவரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் . வியாபாரங்களை செயலிழக்க செய்ய முடியாவிட்டாலும், குறைக்க முற்படவேண்டும். காசுக்காக அலைவதை குறைக்கவேண்டும். அதற்க்கு இப்போதைய வியாபார வித்தைகளை, விதிகளை மாற்றியமைக்க வேண்டும் .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202014:12:12 IST Report Abuse
Tamilan அப்படிதான் வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் அனைத்தும் கூறுகின்றன. கூறுகின்றனவா அல்லது கொட்டமிடுகின்றனவா என்று வித்தியாசம் பார்க்க முடியவில்லை . எனினும், இவர்கள் எப்போதும் இதைத்தான் கூறுவார்கள் . ஆனால் அதன் பின் இதைவிட பெரிதாக ஏதாவது ஒன்று முளைத்துக் கொண்டேதான் இருக்கிறது . இனியும் அப்படிதான் இருக்கும் . ஏனெனில் , இவர்கள் வளர்ந்துவிட்டதாக, வெற்றிபெற்றுவிட்டதாக அனைவரும் நம்பவைக்க முக்காலிஸ்க்கு வெறும் பிரச்சாரங்கள்தான் உதவுகிறது. உண்மையிலேயே வளர்ந்தது, வெற்றிபெற்றது வெறும் கால்வாசிக்கும் குறைவுதான். இதுதான் தொடர்ந்து, காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. பழங்காலமாக இதிலிருந்து ஒதுங்கியிருந்த இந்தியா, இப்போது உலகமயமாக்கல் , தாராளமயமாக்கல் என்ற பெயரில் உலகோடு உலகாக ஒன்றிணைந்து விட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X