போய் வா எம் வீரனே நீ சிந்திய ரத்தம் வீண் போகாது...| Dinamalar

போய் வா எம் வீரனே நீ சிந்திய ரத்தம் வீண் போகாது...

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Sharelatest tamil news


லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.


latest tamil news


இந்திய- சீன எல்லையில் நடந்த மோதலில் நமது வீரர்கள் இருபது பேர் பலியாயினர் அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலுார் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர்.


latest tamil news


தற்போது 40 வயதாகும் இவர் ராணுவத்தில் கடந்த இருபது வருடமாக ஹவில்தாராக இருக்கிறார்.மனைவி மகன் மகள் உள்ளனர்.ராணுவத்தில் சேரவேண்டும் என்று மிகுந்த பிராயசைப்பட்டு சேர்ந்தவர்.நாட்டிற்கு சேவை செய்ய ராணுவமே சிறந்த வழி என்று பலருக்கும் ரோல் மாடலாக இருந்தவர் இவரது தம்பி இதயக்கனியையும் ராணுவத்தில் சேர்த்துவிட்டுள்ளார் மகன் பிரசன்னாவையும் ராணுவத்தில் சேர்த்து உயரதிகாரியாக்குவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
கட்டிய சொந்த வீட்டின் கிரகப்பிரேவேசம் கடந்த 3 ந்தேதி நடந்தது, அன்றுதான் இவரது பிறந்த நாளும் கூட. இரண்டு விழாவையும் சேர்த்து கொண்டாடுவதாக திட்டமிட்டு இருந்தார் ஆனால் எல்லையில் ஏற்பட்ட திடீர் பிரச்னை காரணமாக கிரகப்பிரவேசத்திற்கு வராமல் நேராக லடாக் சென்றுவிட்டார்.
பின் லடாக்கில் இருந்து பழனி இறந்து போன தகவல்தான் வந்தது.மனைவி வானதி தேவி துடிதுடித்துப் போய்விட்டார்.டில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பழனியின் உடல் கொண்டு வரப்பட்டது பின் இன்று காலை கடுக்கலுாருக்கு ராணுவ வண்டியில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
கிராமத்திற்கு இரண்டு கிலோமீட்டர் துாரத்தில் இருந்து ராணுவ வீரர்கள் தேசியக்கொடி போர்த்தப்பட்ட பழனியின் உடலை அணிவகுத்து கொண்டு சென்று பழனி குடும்பத்தாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்தனர்.
அடக்கம் செய்வதற்கு முன்னதாக தேசியக்கொடி மனைவி வானதிதேவியிடம் வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளீட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் 21 குண்டுகள் முழக்கத்திற்கு பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது கூடியிருந்த திரளான கிராம மக்கள் கண்ணீர் மல்க வீரர் பழனிக்கு விடை கொடுத்தனர்.
பிறந்த நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரனே நீ நாட்டிற்காக சிந்திய ரத்தம் வீண் போகாது என்பதே அவர்கள் விட்ட கண்ணீருக்கு அர்த்தமாக அங்கு உணரப்பட்டது.-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X