பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கி கடன் மானியம் பெற அழைப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அன்பழகன், வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, முப்படைகளில் அவில்தார், அதற்கு இணையான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் ஆகியோருக்கு வீடு கட்ட வங்கி கடனில் மானியமாக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிலிருந்து கடன் பெற்றவராக இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை அரசு சார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் வேலை பெற்றவராக இருக்க கூடாது. விண்ணப்பதாரரின் பெயரில் சொந்த வீடு இருத்தல் கூடாது. வீடு விண்ணப்பதாரர் அல்லது அவரது துணைவிக்கு முதல் வீடாக இருத்தல் வேண்டும். விபரம் பெற, திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X