பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' வீரர்களது நிலத்தின் கற்தூண் அகற்றம்: ஆவணங்களை சமர்ப்பித்ததால் பணி நிறுத்தம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியரை சேர்ந்தவர் வடிவேல், 46; முன்னாள் ராணுவ வீரர். விவசாய நிலம் கேட்டு, 2012ல் விண்ணப்பித்தார். 2014ல் புறம்போக்கு நிலத்தில் சர்வே செய்து, அத்துக்கல் நடவு செய்தனர். பின்னர், பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்கப்படவில்லை. தொடர்ந்து, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அதேபோல், குளித்தலை கலப்பு காலனியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரனும், 2014ல் விண்ணப்பம் செய்து, 2016ல் நிலம் பெற்றார். அவருக்கும் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், அந்த நிலத்தை அவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக சிலர் கொடுத்த புகாரின் பேரில், நிலத்தின் கற்தூண்களை அகற்ற, தாசில்தார் ரத்தினவேலுக்கு, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம், கற்தூண்களை வருவாய் துறை ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, நிலத்திற்கான ஆவணங்களை, முன்னாள் ராணுவ வீரர்கள் கொடுத்தனர். இதையடுத்து, பணி நிறுத்தப்பட்டு, 'முன்னாள் ராணுவ வீரர்களிடம் விண்ணப்பம் பெற்று, பட்டா வழங்க வேண்டும்' என, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் அறிவுறுத்தினார். இதுகுறித்து, தாசில்தார் ரத்தினவேலு கூறுகையில், ''டி.ஆர்.ஓ., உத்தரவின்படி, முன்னாள் ராணுவ வீரர்களிடம் விண்ணப்பம் பெற்றுள்ளேன். அவர்களுக்கு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X