பொது செய்தி

தமிழ்நாடு

வெளி நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கட்டாயம் என கலெக்டர் அறிவுறுத்தல்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: 'வெளிநாடு, மாநிலம், மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள், மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்திக்கொள்ள வேண்டும்' என, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடு, மாநில, மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள், உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்; மருத்துவ அலுவலர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வீட்டின் முன் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. அதில், மருத்துவ பரிசோதனையில் உள்ள நபரின் பெயர், முகவரி, குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை கிழித்தல், மறைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்துதல் விதிகளை மீறாமல், வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு வெளி இடங்களுக்குச் செல்வது போன்ற விதிமீறல்களை கண்டறிந்தால், கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, 04324- 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X