தமிழ்நாடு

ஊரடங்கால் அதிகளவில் மிளகு தேக்கம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கு காரணமாக, மிளகு அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


தமிழகத்தில் ஊட்டி, போடி, கம்பம் மற்றும் ஏற்காடு பகுதிகளில், மிளகு சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இந்த பகுதிகளில் விளையும் குறுமிளகு அளவில் சிறியதாக இருந்தாலும், காரத்தில் தனித்தன்மை கொண்டது. இதனால், இந்த மிளகு பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், போக்குவரத்து நிலைமை சீரடையவில்லை. இதனால், சாகுபடி செய்யப்பட்ட மிளகு அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால், விலை குறைந்துள்ளதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மிளகு கொடியை ஒருமுறை நடவு செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் முழு அளவில் மகசூல் கொடுக்கும். அதற்குள் ஏற்படும் இயற்கை சீற்றங்களில், மிளகு கொடிகளை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மிளகுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தடுமாறி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளி நாடுகளுக்கும் மிளகை அனுப்ப முடியவில்லை. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட, பிற மாவட்டங்களுக்கும், மிளகை முழுமையாக அனுப்ப போதிய போக்குவரத்து வசதி இல்லை. இதனால், டன் கணக்கில் விவசாயிகளிடம் மிளகு தேங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ, 550 முதல், 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 350 முதல், 500 ரூபாய் வரைதான் விற்பனையாகிறது. இதனால், சில வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வது போல, மிளகுக்கும் விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X