பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் வெளியில் செல்கிறவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், 100 ரூபாய் அபராதம் வசூலிக்க, கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நேற்று, கரூர் பஸ் ஸ்டாண்ட், வெங்கமேடு, திருமாநிலையூர் பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள், முகக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்களில் இருந்து வந்தவர்களிடம், 100 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் சுதா கூறியதாவது: கலெக்டர் உத்தரவுப்படி கரூர் நகராட்சி பகுதியில், இன்று (நேற்று) மூன்று இடங்களில், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. முதல் நாளில், 10 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது. நாளை முதல் (இன்று) நகராட்சி எல்லை பகுதிகளில், முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களிடம், நகராட்சி ஊழியர்கள் மூலம், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும். நோய் தொற்றில் இருந்து தப்பிக்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும், அபராதம் கட்டுவதை தவிர்த்து கொள்ளும் வகையில், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X