பொது செய்தி

தமிழ்நாடு

இடநெருக்கடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்: போலீசார், புகார்தாரர்கள் அவதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் குறுகிய இடத்தில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், போலீசார், புகார்தாரர்கள் அவதிப்படுகின்றனர்.


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த போது, 94ல் கரூர் நகராட்சி அலுவலகம் அருகில், கரூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷனை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகும், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டடத்தில், குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர் உள்பட, 10க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், போதிய இடவசதி இல்லாததால், போலீசார் சிரமப்படுகின்றனர். மேலும், சுற்றிலும் போதிய வடிகால் இல்லாததால், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத் தொல்லையும், பழைய கட்டடம் என்பதால், நீர் கசிவும் ஏற்படுகிறது. இதனால், இரவு நேர பணிக்கு செல்லும், போலீசார் அருகில் உள்ள, சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் டவுன், அரவக்குறிச்சி சரக பகுதிகளை சேர்ந்த கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல் உள்ளிட்ட, ஒன்பது போலீஸ் ஸ்டேஷன் பகுதி புகார்கள் விசாரிக்கப்படுகின்றன. இதனால், சில நாட்களில் இரு தரப்பை சேர்ந்த புகார்தாரர்கள் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். ஸ்டேஷனில் போதிய இடம் இல்லாததால், வெளியே நிற்கும் நிலை புகார்தாரர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது, இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்படுவது, வாடிக்கையாக உள்ளது. கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் அல்லது அதிக நிலப்பரப்பை கொண்ட இடத்துக்கு மாற்ற, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X