இரவில் நிற்காத பஸ்கள்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கரூர்: க.பரமத்தி பஸ் நிறுத்தத்தில், இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-கோவை நெடுஞ்சாலையில், 18வது கிலோ மீட்டர் தூரத்தில் க.பரமத்தி உள்ளது. அதில், 20க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கோவை, திருப்பூர், கரூர் செல்கின்றனர். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், நிறுத்தப்படுவது இல்லை. தற்போது, ஊரடங்கால் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால்,அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, இரவில் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X