பொது செய்தி

தமிழ்நாடு

சாயக் கழிவுநீரால் நிலத்தடிநீர் பாதிப்பு; நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: சாயக்கழிவுநீரால், நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான பட்டறைகளில், சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால், நீர் அசுத்தமடைந்து, அதை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் பாதிக்கப்படுவதாக, பள்ளிபாளையம் அருகே, பெரியகாடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயி விஜயமோகன் கூறியதாவது: இந்த நிலத்தடி நீரை பயன்படுத்தி தான் நெல் சாகுபடி செய்து வருகிறேன். கடந்த ஒரு மாதமாக அருகில் உள்ள சாயப்பட்டறை கழிவுநீரால், நிலத்தடி தண்ணீர் பாதிக்கப்பட்டு சிவப்பு நிறத்தில், துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டரிடமும் புகார் கொடுத்தோம். இதன் பிறகு, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, நிலத்தடி நீரை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இன்றளவும், நிலத்தடிநீர் சாயக்கழிவுநீர் கலந்து தான் வருகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X