பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நாமக்கல்லில் ஆலோசனை கூட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. அதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்கும்படி, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம், காலை, மதியம் என இரண்டு கட்டமாக, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசினார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவ, மாணவியரின், விடைத்தாள்களை, வரும், 22 முதல், 27க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், மதிப்பெண் பட்டியல், வருகை பதிவேடு ஆகியவற்றையும், பள்ளிக் கல்வித்துறை வழங்கிய படிவத்தில் பூர்த்தி செய்து, வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறையினர் கூறியதாவது: தலைமையாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் பட்டியல், வருகை பதிவேடு விபரங்கள், மதிப்பெண் சான்று ஆகியவற்றை, பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்துக்கு அனுப்பிவிடுவோம். அங்கு, இரண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், வருகை ஆகியவற்றை கணக்கிட்டு, பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் வழங்கப்படும். விடைத்தாள் தராத பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X