சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பவித்திரம் நோக்கி சென்றது. அந்த பஸ்சை, டிரைவர் வருதராஜ், 53 என்பவர் ஓட்டிச் சென்றார். கொசவம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த செங்கல்லை பஸ்சின் முன்புற கண்ணாடியை நோக்கி வீசியுள்ளார். அதில், பஸ் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இச்சம்பவத்தால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X