பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனையின்றி ஜவுளிகள் தேக்கம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: விசைத்தறி தொழிலையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ஊரடங்கால் பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யபட்ட ஜவுளிகள் தேங்கியுள்ளதால், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் விசைத்தறி தொழிலுக்கு பெயர் போனது பள்ளிபாளையம். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலை, சட்டை மற்றும் பல வகையான துணிகள், வடமாநிலங்களில் விற்பனையாகின்றன. ஊரடங்கால், கடந்த, 60 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி தொழிலாளர்கள் துயரத்திற்கு உள்ளாகினர்; பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு தளர்வால், மீண்டும் விசைத்தறிகள் செயல்பட்டாமலும் உற்பத்தி செய்த துணிகள், விற்பனையின்றி தேங்கியுள்ளன. இது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை தர முடியாத நிலை, உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X