கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

Added : ஜூன் 18, 2020
Share
பள்ளிபாளையம்: சின்ன ஆனங்கூரில் கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பள்ளிபாளையம் அருகே, வெப்படை அடுத்த சின்ன ஆனங்கூர் பகுதி விவசாயம் நிறைந்தவை. இங்கு இரை தேடி ஏராளமான மயில்கள் வரும். நேற்று காலை, 8:00 மணியவில், இப்பகுதியில் உள்ள குட்டை தோட்டத்தில் உள்ள, 75 அடி கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து, உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அப்பகுதி

பள்ளிபாளையம்: சின்ன ஆனங்கூரில் கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பள்ளிபாளையம் அருகே, வெப்படை அடுத்த சின்ன ஆனங்கூர் பகுதி விவசாயம் நிறைந்தவை. இங்கு இரை தேடி ஏராளமான மயில்கள் வரும். நேற்று காலை, 8:00 மணியவில், இப்பகுதியில் உள்ள குட்டை தோட்டத்தில் உள்ள, 75 அடி கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து, உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. அப்பகுதி மக்கள், வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X