பொது செய்தி

தமிழ்நாடு

ராஜ, கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு பணி ஆய்வு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நாமக்கல்: ப.வேலூர் அடுத்த வடகரையாத்தூர் காவிரி ஆற்றில், மேட்டூர் அணையில் இருந்து, 51வது மைலில், ஜேடர்பாளையம் படுகையணை அமைந்துள்ளது. இடது கரையில் இருந்து, ராஜ வாய்க்கால், 33.60 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் மூலம், 9,615 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராஜ வாய்க்காலில் இருந்து, கொமாரபாளையம் வாய்க்கால், 17.90 கி.மீ., பொய்யேரி வாய்க்கால், ஐந்து கி.மீ., நீளத்திற்கு பிரிந்து செல்கின்றன. அதன் மூலம், 3,631 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து, 66வது மைலின் இடது கரையில், மோகனூர் வாய்க்கால், 22.54 கி.மீ., நீளத்திற்கு அமைந்துள்ளது. அதன் மூலம், 2,901 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ராஜ, கொமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால்களின் கரைகளை, கான்கிரீட் சுவர் கட்டி உறுதிப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும், மதகுகள், மிகுதி நீர் போக்கி மதகுகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைத்து நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் மூலம், 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணியை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், மே, 22ல் துவக்கி வைத்தனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நான்கு வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த, 16 ஆயிரத்து, 143 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்படும். இப்பணிகளை, கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோகனூர் நாவலடியான் கோவில் மற்றும் சம்பா மேடு பகுதிகளில், மோகனூர் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணி. ப.வேலூர், ராஜ வாய்க்காலில், குச்சிபாளையம் கிராம பகுதியில், கொமாரபாளையம் வாய்க்கால், வெங்கரை பகுதியில், ராஜ வாய்க்கால் ஆகியவற்றில், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X