பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர், கறுப்பு உடையணிந்து போராட்டம் நடத்தினர். நாமக்கல்லில் நடந்த போராட்டத்தை, மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில், மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை, அரசு விலையின்றி வினியோகம் செய்தது. அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்தப் பணிகளில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு, மருத்துவ காப்பீடு திட்டம் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. மற்ற பணியாளர்களுக்கு வழங்கியது போல், 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தங்களுக்கு, இரட்டிப்பு சம்பளம், மே மாதத்திற்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இடைநில்லா பயணச்செலவு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். விற்பனையாகாத, 500 ரூபாய்க்கான மளிகை தொகுப்புகளை நிர்வாகமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன, உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விற்பனையாளர்கள், 600க்கும் மேற்பட்டோர் கறுப்பு உடையணிந்து போராட்டத்தை துவக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X