பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் முறைகேடாக தண்ணீர் எடுப்பு; இலவச மின் இணைப்பு துண்டிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

மோகனூர்: காவிரியில் வாய்க்கால் வெட்டி, முறைகேடாக தண்ணீர் எடுத்த விவசாயின் இலவச மின் இணைப்பை, அதிகாரிகள் துண்டித்தனர். மோகனூரை சேர்ந்தவர் அஜிதன்; தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளராக உள்ளார். அவர், தன் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு, 2017ல், தமிழக அரசின் இலவச மின் இணைப்பை பெற்றுள்ளார். காவிரி ஆற்றில் இருந்து தோட்டம் வரை, சிறிய வாய்க்கால் வெட்டி, அந்த வாய்க்காலில், இலவச மின்இணைப்பை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகிறார். அவற்றை, வணிக நோக்கில் பயன்படுத்துவதாக, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கலெக்டர், மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக, கலெக்டர் உத்தரவுப்படி, மின்வாரிய உதவி பொறியாளர் அருண் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், அஜிதன் தோட்டத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, இலவச மின் இணைப்பை பயன்படுத்தி, காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது தெரிந்தது. இதையடுத்து, முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி, இலவச மின் இணைப்பை துண்டித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X