திறக்கப்படாத சுகாதார வளாகம்; பயன்பாட்டுக்கு வருவது எப்போது?| Dinamalar

திறக்கப்படாத சுகாதார வளாகம்; பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Added : ஜூன் 18, 2020
Share

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மல்லசமுத்திரம், நான்காவது வார்டு காமராஜர் தெருவில், 150க்கும்மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன், தூய்மை இந்தியா திட்டத்தில், ஒன்பது லட்சத்து, 80ஆயிரம் ரூபாய் மதிப்பில், சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பகுதியினர், திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விரைவில், சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X