ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார்: சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும், ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என சுப்ரீம்
Supreme Court, SC, annual Rath Yatra, Puri Jagannath temple, coronavirus, corona, covid 19, சுப்ரீம் கோர்ட், புரி, ஜெகன்நாதர், கோயில், ரதயாத்திரை, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும், ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsஇதனை விசாரித்த தலைதமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ரத யாத்திரைக்கு நாங்கள் அனுமதி அளித்தால், கடவுள் ஜெகன்நாதரே எங்களை மன்னிக்க மாட்டார். தொற்று நோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

இதன் காரணமாக பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதிப்பிற்காக இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது. 10 ஆயிரம் பேர் மட்டும் ரத யாத்திரையில் கலந்து கொண்டாலும், அதுவும் தீவிரமான விஷயம் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202023:45:05 IST Report Abuse
Dr.C.S.Rangarajan 'ஊர் கூடி தேர் இழுப்பது' என்ற சொல்லாடல் 'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே' என்பதை விளக்குகிறது. ஊர் கூடினாலும், தேரை விட்டுவிட்டு, போகாத, போகத்தகாத ஊரை நோக்கி போக விழைவது ஏன்? தேருக்கும், மதத்திற்கும் தொடர்பிருப்பதாக 'மதசார்பின்மை' உந்தும் நாட்டில் 'ஊர் கூடலாம்' ஆனால் 'தேர் இழுப்பது' நடக்காதுபோலும்
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
18-ஜூன்-202019:38:52 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் கடையை திறக்கச் சொல்லி அனுமதி கொடுத்ததை எந்த கடவுள் மட்டுமல்ல பெண்களும் மன்னிக்க மாட்டார்களே??
Rate this:
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
18-ஜூன்-202021:22:36 IST Report Abuse
CHINTHATHIRAIDo you know why people are drinking?...
Rate this:
Rajas - chennai,இந்தியா
18-ஜூன்-202023:08:27 IST Report Abuse
Rajasடாஸ்மாக் வழக்கில் கோர்ட்டில் உறுதி மொழி கொடுப்பதற்கு (வழக்கம் போல கோர்ட் சொல்வதை செய்ய மாட்டார்கள் என்பது வேறு) அரசே முன்னே வரும். டாஸ்மாக் என்றால் விதி மீறல்கள் கண்டு கொள்ளப்படமாட்டாது. கோவில் திருவிழாக்களில் யார் தலைமையில் கோர்ட்டுக்கு உறுதி மொழி கொடுப்பார்கள். இங்கே அரசு வழக்கம் போல கண்டு கொள்ளாமல் இருந்து விடும்....
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
18-ஜூன்-202019:25:54 IST Report Abuse
dina உச்ச நீதி மன்ற தீர்ப்பு சரியானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X