‛அக்சய் சின்னை மீட்க வேண்டிய நேரம்': பா.ஜ.,எம்.பி நம்க்யால் அதிரடி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
Aksai Chin, BJP, Jamyang Tsering Namgyal, Ladakh, bjp mp, பாஜ, எம்பி, சீனா, எல்லை

புதுடில்லி: ‛சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான அக்சய் சின் பகுதியை மீட்க வேண்டிய நேரம் இது தான்,' என லடாக் பா.ஜ., எம்.பி., ஜம்யாங் செரிங் நம்க்யால் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் உடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவம் தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சீன தரப்பு இதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை. கடந்த ஒன்றரை மாதமாகவே, எல்லையில் சீனா படைகளை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்திய தரப்பிலும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஜூன் 6ம் தேதி நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்தியாவும், சீனாவும் மீண்டும் தங்களுடைய பழைய நிலைக்கே திரும்ப ஒப்புகொண்டுள்ளன.


latest tamil news


இந்நிலையில் திடீரென தன்னுடைய நிலையை தன்னிச்சையாக மாற்றி கொண்ட சீனா, இந்தியாவிற்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கூடாரங்களை அமைத்து கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றுள்ளது. அத்துமீறி நுழைந்த சீன படைகளின் கூடாரங்களை இந்திய வீரர்கள் அகற்ற முயன்ற போது மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லடாக் யூனியன் பிரதேசத்தின் பா.ஜ.,எம்.பி நம்க்யால் கூறியிருப்பதாவது:

சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சின் மட்டுமல்லாது, கில்ஜித் மற்றும் பலுசிஸ்தான் போன்ற பகுதிகளும் லடாக்கின் ஒரு அங்கமாகும். 2020ம் ஆண்டில் உள்ள இந்தியா ஒன்றும் 1962ம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல. இந்திய மேய்ப்பர்கள் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல வேண்டும். சீனா அவர்களுக்கு அனுமதியை மறுத்தால், இந்திய நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். எல்லையை பாதுகாப்பதில் உள்ளூர் மக்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
20-ஜூன்-202011:47:35 IST Report Abuse
Abdul Rahman நான் சீன பொருட்களை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறேன். உள்நாட்டு, கொரியா போன் தான் பயன் படுத்துகிறேன். இனி ஒருபோதும் சீன பொருளை நான் வாங்க மாட்டேன். அனைவரும் இந்த உறுதி ஏற்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி பெறுக வேண்டும். வாழ்க பாரதம்.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
20-ஜூன்-202010:40:26 IST Report Abuse
Abdul Rahman மிக சரி. இதுதான் சரியான நேரம். நான் பல தடவை சொல்லி விட்டேன்.
Rate this:
Cancel
A.RAJA PANDIAN - zahle,லெபனான்
19-ஜூன்-202017:18:35 IST Report Abuse
A.RAJA PANDIAN அவரு அங்கத்தப்பா இருக்காரு உன்னமாரி தேசப்பற்று உள்ளவனை அப்படியே நாடுகடத்தணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X