பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும்: ஏ.கே.விஸ்வநாதன்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Chennai, commissioner, AK Vishwanathan, Lockdown in chennai, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, சென்னை, ஊரடங்கு, பொதுமுடக்கம், விஸ்வநாதன்

சென்னை: திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது எனவும், மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதற்கிடையே கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மறைவுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து போலீசாரும் சமூக இடைவெளியுடன் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை வேப்பேரியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


latest tamil news


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுமுடக்க உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமுடக்க நாட்களில் சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்கு சென்று வர அனுமதி கிடையாது. வெளியே இருந்து சென்னைக்கு வருபவர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். காய்கறி, மளிகை பொருட்களை அருகிலிருக்கும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. மத்திய, மாநில அரசு அலுவலக பணியாளர்களை அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.


latest tamil news


திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது. மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும். போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சென்னையின் உள்பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும். சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் டிரோன் கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்களை கண்காணிப்போம். கொரோனாவுக்கு 788 காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
18-ஜூன்-202023:56:22 IST Report Abuse
krishnaraj Corona Terrorism
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
18-ஜூன்-202020:25:56 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி பரப்பிவிட்டு தப்புள்ளிக்கு தப்பிச்சிக்கிட்டாங்க கைகள் கட்டப்பட்ட காவல்த்துறை மாட்டிக்கிட்டாங்க
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
18-ஜூன்-202019:05:14 IST Report Abuse
Selvaraj Thiroomal இவ்வளவு காலதாமதமாக அறிக்கை கொடுப்பது நியாயமா? நிறுவனங்களை குறைந்த பணியாளர்களுடன் செயல்பட அனுமதித்துவிட்டு அதற்கு கொடுத்த பாஸ் செல்லாதென்றால் எப்படி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X