பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இரு குழந்தைகள் உட்பட 18 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவையில் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த ஆறு பேர் உட்பட இன்று ஒரே நாளில், 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



latest tamil news




ஒரே பகுதியில் 23 பேர் பாதிப்பு


கோவையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ககை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, கோவை ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா தொற்றால் அண்மையில் உயிரிழந்தார். இளைஞர் வசித்து வந்த பகுதி, கொரோனா கட்டுப்படுத்துதல் மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அப்பகுதியில் வசிப்போருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நேற்று வரை, 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்பகுதியில் மேலும் 6 பேர் கொரோனா பாதிப்புள்ளாகியிருப்பது இன்று தெரியவந்துள்ளது.


latest tamil news



இதுபோக, நீலகிரியில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண், தெலுங்குபாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண், போத்தனுாரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, சிதன்புரத்தை சேர்ந்த 39 வயது ஆண், கணுவாயை சேர்ந்த 65 வயது மூதாட்டி, சமத்துாரை சேர்ந்த 70 வயது முதியவர், சுங்கம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர், சுபிகவுண்டன்புதுாரைச் சேர்ந்த 82 வயது முதியவர், சரவணம்பட்டியை சேர்ந்த 27 வயது இளைஞர், உடையாம்பாளையத்தை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு நேற்று பாதிப்பு இருப்பது செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் இருந்து வந்த, உடையாம்பளையம் மற்றும் நடுபுனி பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் பெண் குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



விமானத்தில் வந்த 14 பேருக்கு...


அதேபோல், டில்லியில் இருந்து விமானம் மூலம் வந்த பயணிகளை பரிசோதனை செய்ததில் 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், பிரத்யேக பஸ்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


latest tamil news




சிகிச்சையில் கூடுதல் டாக்டர்கள்


கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 104 பேர் தற்போது கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல்நிலையும் சீராக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
18-ஜூன்-202022:47:39 IST Report Abuse
Girija கரும்பு கடை உக்கடம் மரக்கடை ஏரியாவுக்குள் புகுந்து வாருங்கள் ஸ்கொரே சென்னையை தோற்கடிக்கும். கப்பார்சிங்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X