பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டியது; இதுவரை 625 பேர் பலி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 18) ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 81 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,736 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,63,506 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil newsஇன்று சென்னையில் 40 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவண்ணாமலை, கடலூர், விக்கிரவாண்டி, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 36 பேர் அரசு மருத்துவமனையிலும், 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-202018:30:52 IST Report Abuse
Murugesan இத்தனைக்கும் காரணம் சென்னை மக்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் திறமையற்ற திட்டமிடல் தமிழ்நாட்டின் சாபக்கேடுகளான எதிர்கட்சிகள் அவர்களின் தொலைக்காட்சிகளும் காரணம்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
19-ஜூன்-202011:30:11 IST Report Abuse
Balasubramanian Ramanathan Onruenivom vaa 2.0 aarambam idha Vida kattumaya irrukum. Appo enna pannuvienke. Eni thalaivaruku tholiviye kedaiyadhu.
Rate this:
Cancel
Veerappan Elango - Erode,இந்தியா
19-ஜூன்-202010:19:43 IST Report Abuse
Veerappan Elango வருகிற ஜூலை 16 , 2020 பிறகு சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராகு மற்றும் கேது கிரகங்களின் பிடியிலிருந்து விடுபடுப்பதால் கொரோன வைரஸின் பாதிப்பு குறைந்து காணப்படும் அதுவரை மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X