மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்; கவிழ்கிறது பா.ஜ., ஆட்சி?

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Congress, BJP, Manipur, politics, guwahati, manipur government, National People's Party, MLA,  BJP MLA, காங்கிரஸ்,பாஜ

கவுகாத்தி: மணிப்பூரில் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்களால், பா.ஜ., ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்., கட்சி உரிமை கோரியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜ.வை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது பா.ஜ.,வுக்கு அளித்து வந்த ஆதரவை, 9 கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, சுயேட்சைகளின் ஆதரவுடன், காங்., ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கோன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்., கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த புதிய கூட்டணிக்கு, திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும், சுயேட்சை எம்.எல்.ஏ., ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இக்கூட்டணி கட்சிகளின் தலைவராக இருக்கும் ஒக்ரம் இபோதி சிங், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேலும் சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி உள்ளார். இந்த அதிரடி மாற்றங்களால், பா.ஜ., ஆட்சி பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202001:11:29 IST Report Abuse
தல புராணம் பாஜக விதைத்த வினை அறுவடைக்கு வந்திருக்கிறது.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-202000:05:37 IST Report Abuse
தமிழ்வேல் சாணக்கியர் என்ன பன்றாரு 🤔
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
18-ஜூன்-202020:50:30 IST Report Abuse
Indhuindian கூபிடுங்கப்பா திக் விஜய் சிங். கபில் சிபல், ப சி, சஞ்சய் ஜா, ரந்திப் சுர்ஜேவாலா மற்றும் பலர். இப்போ நீங்க இவங்களுக்கு குடுத்தது எவ்வளவு? சொல்லிடீங்கன்னா மார்க்கெட் நிலவரம் சரியா தெரிஞ்சிடும்
Rate this:
18-ஜூன்-202022:19:18 IST Report Abuse
பாமரன்ஏய்...அழுவாதப்பா... இத்தனை நாள் நாம் குதூகலிக்கலையா...?? இப்போ உடையவனுக்கு போகுது... விடுவியா..கண்ணை துடைச்சுக்கோ... ஆங்...
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-202000:07:50 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க குடுத்தத விட ஒரு 50 கோடி கூட இருக்கப்போவுது. அவ்வளவுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X