பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கான சிறப்பு மருந்து அமெரிக்காவிலிருந்து தமிழகம் வரவழைப்பு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை: கொரோனா சிகிச்சையில் பயன்படும் சிறப்பு மருந்து அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தற்போது ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மருந்து தவிர 'டோசிலிசுமாப்' என்ற மருந்தும் வெளிநாடுகளில் கொரோனா சிகிச்சையின் போது பரிந்துரை செய்யப்படுகிறது.



latest tamil news



'டோசிலிசுமாப்' என்ற மருந்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் நல்ல பலன் தந்துள்ளது. இதனால் தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் பரிந்துரையின் படி டோசிலிசுமாப் (Tocilizumab) தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முதற்கட்டமாக 100 மருந்து பாட்டில்கள் அமெரிக்காவிலிருந்து தற்போது வரவழைக்கப்பட்டுள்ளது. ஐ.வி., மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை ரூ 50,000 முதல் ரூ 1 லட்சம் வரை ஆகும்.


latest tamil news



சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் பயன்படுத்த டோசிலிசுமாப் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Raman - Chennai ,இந்தியா
19-ஜூன்-202003:06:30 IST Report Abuse
K Raman In USA price is $ 535 In Indian Rs,40000 plus duty & taxes
Rate this:
Cancel
K Raman - Chennai ,இந்தியா
19-ஜூன்-202002:56:47 IST Report Abuse
K Raman In USA Price is $ 535. In Indian Rs.40000 + Duty & Taxes
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
18-ஜூன்-202022:03:23 IST Report Abuse
sundarsvpr கொரோனா அறிகுறி என்று வந்தவர்களுக்கும் இந்த மருந்து தேவையா/ அல்லது நோய் முற்றினவர்களுக்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X