ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு| Amma Canteens to resume providing free food during lockdown in TN districts | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (2)
Share

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsதமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஏழை மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கடந்த மாதம் 31 வரை விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருவதால் அப்பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


latest tamil newsஇது தவிர முதியோர், நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் நலன் கருதி சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் சமையல் செய்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை இம்மாதம் 19 முதல் 30ம் தேதி வரை இருக்கும் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X