வீர மரணம் அடைந்த மே.வங்க வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு ; மம்தா| Mamata announces Rs 5 lakh ex-gratia for Galwan martyrs from Bengal | Dinamalar

வீர மரணம் அடைந்த மே.வங்க வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு ; மம்தா

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (6)
Share

கோல்கட்டா : லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணம் அடைந்த மேற்குவங்கத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.latest tamil newsலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீனா - இந்தியா இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய வீரர்களின் மரணத்திற்கு இந்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. நாடே சீனாவிற்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. இந்த வீரர்களில் 2 பேர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்.


latest tamil newsஇந்நிலையில் வீரர்கள் மரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா டுவிட்டரில் கூறுகையில், லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணம் அடைந்த நமது மாநிலத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். நமது தேசத்தை காக்க அவர்கள் செய்த இவ்வளவு பெரிய தியாகத்தை எதுவும் ஈடு செய்ய முடியாது. இந்த கடினமான நேரத்தில் நமது மண்ணின் அடுத்த மகன்களுடன் நாம் துணை நிற்போம். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X