உலக கோப்பை பைனலில் விலை போய்விட்டோம்: முன்னாள் இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு| Sri Lanka sold 2011 World Cup final to India, alleges SL sports minister | Dinamalar

உலக கோப்பை பைனலில் விலை போய்விட்டோம்: முன்னாள் இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (11)
Share

கொழும்பு: 2011-ல் நடந்த கிரிக்கெட் உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததாகவும்,அதில் நாங்கள் விலை போய்விட்டோம் எனவும் இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார்.latest tamil news
மும்பையில், 2011ல் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை பைனலில் இந்திய அணி (277/4, 48.2 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை (274/6, 50 ஓவர்) வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் சூதாட்டம் நடந்ததாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, 2011 உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சுமத்தி உள்ளார். விளையாட்டு துறை அமைச்சராக இருந்த இவர், அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இப்போட்டியை காண மும்பைக்கு வந்திருந்தார்.

இதுகுறித்து மஹிந்தானந்தா அலுத்கமகே கூறியது: உலக கோப்பை பைனல் 'பிக்சிங்' செய்யப்பட்டது. இப்போட்டியில் நாங்கள் விலை போய்விட்டோம்.. பைனலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். அப்போது நான்தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். ஒரு நாடு எனும் முறையில் நான் இதை அறிவிக்க விரும்பவில்லை. 2011 அல்லது 2012-ம் ஆண்டு போட்டியா என உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து யாரிடம் வாதிட முடியும். இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் சில கட்சிகள் ஈடுபட்டன.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
முன்னாள் கேப்டன்கள் மறுப்புஇதுகுறித்து முன்னாள் இலங்கை கேப்டன் மகிளா ஜெயவர்தனே கூறுகையில், ''இலங்கையில் தேர்தல் நெருங்கிவிட்டது. சர்க்கஸ் வேலை தொடங்கிவிட்டது. இனி, பெயர்கள், ஆதாரங்கள் என வெளியாகும். இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு,'' என்றார்.இப்போட்டிக்கு கேப்டனாக இருந்த சங்ககரா கூறுகையில், ''இவர், தனது ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் முழுமையாக விசாரிக்க முடியும்,'' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X