சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'வட மாநிலத்தவர், நம்மவர் கடைகளில் வேலை பார்க்கலாம்; ஓட்டலில் துடைக்கலாம்; தோட்டவேலை செய்யலாம்; வட மாநில அதிகாரிகள், அரசில் பணியாற்றக் கூடாதா...' என, மடக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தமிழக அரசு பணிகளில், சிறப்பு சலுகைகள் மூலம், தமிழே அறியாத வட மாநித்தவர் பலருக்கு தாரை வார்க்கப்படுகிறது. வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க, தமிழக அரசே துணை போவதா?


'அப்போ, தி.மு.க.,விடம் எதிர்பார்ப்பது வீண் என்ற, அ.தி.மு.க.,வினர், 'மைண்ட் வாய்ஸ்' கேட்கவில்லையோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி அறிக்கை:
முதல்வர் மீது அவதுாறுகளையும், பழிகளையும் சுமத்தி, மலிவான அரசியலில் ஈடுபடும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இத்துடன் அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பான எந்த அரசியல் கட்சியும் இதை செய்யாது.

'இப்போது அதை, காங்கிரசே மறந்திருக்கும்; இப்போதைய பிரச்னைக்கு வாருங்கள்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இந்தியா வலிமையாக இருப்பதால் தான், சீனா பயப்படுகிறது. இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்தது, காங்., அரசு தான்.



'மார்ச் மாதத்திலிருந்து, தி.மு.க., இதைத் தான் சொல்லி வருகிறது. சமூக பரவலை தடுக்க என்ன வியூகம் வைத்திருக்கிறது சொல்லுங்கள்...' என, எதிர் கேள்வி
கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: சென்னையில், கொரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை, கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதை காட்டுகிறது. மக்களை காப்பாற்ற, ஏதேனும் திட்டங்கள் அரசிடம் உள்ளனவா?



'தாக்குதலை முன்கூட்டியே அறிந்த ராகுல், தடுத்து நிறுத்த வேண்டியது தானே...' என, மடக்கத் துாண்டும் வகையில், தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை
: எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலால், நம் வீரர்கள், 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் தலைவர் ராகுல், தொடர்ந்து எச்சரித்து வந்தார். அதை மதிக்காமல் செயல்பட்ட மோடி அரசு தான், இதற்கு பதில் சொல்ல வேண்டும்.



'அதிகபட்சம், மொத்தமாக ஒரு சில குவிண்டாலில், உங்கள் வேலை முடிந்து விடும்; அந்த அளவுக்குத் தான், தொண்டர்கள் உள்ளனர்...' என, கிண்டல் செய்யத் துாண்டும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி அறிக்கை:
காங்., முன்னாள் தலைவர் ராகுலின், 50வது பிறந்த நாளான இன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட உள்ளோம். ஒவ்வொரு தொண்டரும் தவறாமல், தங்கள் பகுதியில் உள்ள, ஒரு விவசாயியை சந்தித்து, அவருக்கு பயன்படும் வகையில், 5 கிலோ விதை நெல் மற்றும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
19-ஜூன்-202019:04:29 IST Report Abuse
IYER AMBI பகுத்தறிவு பாசறையிலிருந்து யாரவது எதையாவது செய்து கொரானாவிற்கு மருந்து கண்டுபிடித்து எதிர்க்கட்சி தலைவருக்கு கொடுத்து உதவவும். அப்படி செய்து விட்டால் ஓரிரு தலைமுறைக்கு அவரே முதல்வராக இருக்க முடியும். அவரும் பாவம் என்ன செய்வது என்ன பேசுவது என்று தெரியாமல் தினமும் கேள்வி கேட்டு தினமும் ஆட்சி களையும் என்று ஆருடம் கூறி சலித்துப்போயிருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X