பொது செய்தி

இந்தியா

சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ 471 கோடி ஒப்பந்தம் ரத்து

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்ய சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417

புதுடில்லி: இந்தியாவில் கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே ரயில் பாதையில் சிக்னல் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்ய சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.latest tamil newsபஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417 கி.மீ., தூரத்திற்கு சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் ஒன்று சீனாவின் பீஜிங் நேசனல் ரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளாக 20 சதவீத பணிகளே நிறைவடைந்துள்ளது. முறையாக பணிகளை முடிக்காத காரணத்தால் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 471 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்தது.


latest tamil newsஇந்நிலையில் எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் காரணமாகவும் பாதுகாப்பு நிமித்தமாகவும் சீன தயாரிப்பு பொருட்களை தவிர்க்குமாறு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.எஸ்.டி.என்.எல்., நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
21-ஜூன்-202017:49:11 IST Report Abuse
Amirthalingam Shanmugam குப்பை சாதனங்களை கொடுத்து ஒப்பந்தத்தில் கொள்ளையடித்து பொருளாதாரத்தை நாசம் செய்வது,மலிவான பொருட்களை கொடுத்து மக்களின் இயாலாமையை உபயோகப்படுத்தி பிளாஸ்டிக்களிலிருந்து ஸ்டீல் மரச்சாமான்கள் எலெக்ட்ரானிஸ் வரை கொடுத்து நமது காசை கரியாக்கியத்துடன் ,இப்போது கொள்ளை நோயை பரப்பியதோடல்லாமல் நமது எல்லையை கைப்பற்றவும் துணிந்து விட்ட சப்பை மூக்கு காரங்களுக்கு கொடுக்கும் முதல் சவுக்கடி அவனின் பொருட்களை வாங்காமல் இருப்பதே.இந்த வினாடியில் சபதம் ஏற்போம் தன்னிறைவு மற்றும் தர்ச்சார்பு கொள்கைகளை கடைபிடிப்போம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-ஜூன்-202012:39:50 IST Report Abuse
Tamilnesan கண் கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் செய்து என்ன பயன்? பல லட்சம் கோடிகளை கடந்த எழுபது ஆண்டுகளாக சீனாவிடம் வியாபார நோக்கில் கொடுத்தாகி விட்டது. மொத்தத்தில் நேரு குடும்பம் இந்தியாவை விட்டு விரட்டப்பட்ட வேண்டிய குடும்பம்.
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
19-ஜூன்-202010:11:50 IST Report Abuse
Rajan நடைபெற்றுக்கொண்டிருக்கிற அணைத்து சீன சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் வேலைகளையும் இந்திய நபர்களை வைத்து சரிபார்க்க வேண்டும். அவர்கள் தந்திரமே இது போன்ற வேலைகளை செய்யும்பொழுது சீனாவிற்கு தொடர்ந்து தகவல் செல்வதுபோல் ஏதாவது சிப் போன்று சாதனங்களை பயன்படுத்துவது தான். சில வருடங்களுக்கு பின்தான் தெரியவரும். அதற்குள் அவர்கள் ஆதிக்கம் மேலோங்க துவங்கிவிடரும். இது அரசு கான்ட்ராக்ட்களில் மட்டுமல்ல தனியார்துறையிலும் கூட.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X