கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கொரோனா பாதிப்பு அதிகரித்து கேரளாவில் மேலும் 97 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. கேரளாவில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. கேரள அரசின் சிறந்த நடவடிக்கையை உலகின் பல நாடுகளும் பாராட்டின. இந்நிலையில் நோய் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கேரளாவின் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில், 3 பேர் மட்டுமே கேரளாவை சேர்ந்தவர்கள். மற்ற 65 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளத்திற்கு வந்தவர்கள். 29 பேர் வெளிமாநில (புலம்பெயர்) தொழிலாளர்கள் ஆவர். தற்போது 1,358 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜூன்-202021:55:07 IST Report Abuse
A.George Alphonse Comparing to other states it is very less here.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X