பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் ஊர் பெயர்கள் மாற்றம்; அரசாணை வாபஸ்: அமைச்சர்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை:தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு,தமிழை போன்று ஆங்கிலத்திலும் அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து 1,018 ஊர்களின் பெயர்களை மாற்ற, அரசாணை வெளியிடப்பட்டது. உதாரணமாக, 'தொண்டயார்பெட்'

சென்னை:தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு,தமிழை போன்று ஆங்கிலத்திலும் அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. தொடர்ந்து 1,018 ஊர்களின் பெயர்களை மாற்ற, அரசாணை வெளியிடப்பட்டது. உதாரணமாக, 'தொண்டயார்பெட்' என்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் எழுதப்படுவது, தண்டையார்பேட்டை என, மாற்றப்பட்டது. அதேபோல், புரசைவாக்கம், வ.உ.சி. நகர், அயன்புரம், அமைந்தகரை, உள்ளிட்டவையும் மாற்றப்பட்டன. மேலும் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது thiruvallikkenni என்றே உச்சரிக்க வேண்டும். எனவும், tuticorin என்பதை thoothukudi என அழைக்க வேண்டும். இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின் புதிய அரசாணை வெளியிடப்படும் என பதிவிட்டு உள்ளார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202005:14:56 IST Report Abuse
மலரின் மகள் செய்வன திருந்தச் செய் - ஆத்தி சூடி (ஆத்தி சூடி யா? இல்லை ஆத்திச்சூடி யா? "ச்" இணைப்பாக வருமா வராதா?) தமிழை முறையாக பள்ளியில் பயிலாமல் பின்னாளில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் பயில்வதன் பொருட்டு எனது ஆசிரியர் சொல் கேட்டு மலருக்குள் கருத்து பகுதியில் வந்தவள். நிறைய வாசகர்களின் ஊக்கமும், மலரின் சில ஆசிரியர்கள் தவறுகளை சில நேரங்களில் சுட்டி காட்டியும், பல நேரங்களில் திருத்தி வெளியிட்டும் வெகு சில நேரங்களில் கருத்து பகுதியிலேயே எனக்கு விளக்கமும் அளித்தார்கள். ஓரளவிற்கு சிறப்பாகவே தமிழ் எழுத படிக்க வருகிறது. பிழைகளை குறைத்து கொண்டு அது மீண்டும் வராத வண்ணமும் எழுத முயற்சித்து ஓரளவு மகிழ்ச்சியும் இருக்கிறது. இருந்தாலும் இலக்கணங்கள் அவ்வளவாக வருவதில்லை. சில நேரங்களில் வரும் சந்தேகம் விளக்கம் கேட்டு இங்கேயே எதிர்பார்க்கிறேன். தினமலரின் அன்புக்குரிய ஆசிரியர் குழுவினரும், வாசகர்களும் குழப்பத்தை தீர்ப்பார்கள். நன்றி.
Rate this:
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
19-ஜூன்-202003:39:56 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan பிறரும் சில குறைகளைச்சுட்டிக்காட்டியிருந்தாலும் மின்னம்பலம் இதழ் மூலமாக ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப்பெறுமாறு வேண்டியிருந்தோம். திரும்பப்பெற்றதில் மகிழ்ச்சி. அவ்வேண்டுகோளில் சுட்டிக்காட்டியவாறு தமிழ்க்காப்புக்கழகம் வேண்டுகோளை ஏற்று ஒலிபெயர்ப்பு வரையறை முதலில் முடித்து அதன்படி ஆங்கில் ஒலி பெயர்ப்பு ஆணையை வெளியிடுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி. தமிழா விழி.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202003:08:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி 5 லட்சத்தில் திட்டம் போட்டு முடித்தார்களாம். ஹா, ஹா. There are so many ways to skin a cat என்பார்கள். இந்திய மொழிகள் தமிழ் உள்பட phonetic எழுத்துக்கள் கொண்ட மொழி. அதாவது பொதுவாக ஒரு வார்த்தையை, எழுத்துக்களை ஒவ்வொன்றாக கூட்டி படித்தால் அந்த வார்த்தையின் உச்சரிப்பு வரும். (இது பொதுவான வாசகம், ஆனால் தமிழ் இலக்கணத்தில் பல்வேறு சூத்திரங்கள் உள்ளன, அவைகள் இப்போது சற்று தள்ளி வைப்போம்). ஆனால் ஆங்கில உச்சரிப்பு அப்படி அல்ல. தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாக எடுத்து ஆங்கிலப்படுத்தினால் நாம சொல்ல வர்ற தமிழ் வார்த்தை வராது. ஆங்கில உச்சரிப்பு முறைகளை வகைப்படுத்தாமல் இது சாத்தியமில்லை. இந்த திட்டத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய பள்ளங்களிள் இது ஒன்று. - ஆங்கிலத்தின் உச்சரிப்பு முறை இங்கே எவனுக்கும் தெரியாது. அதுவே பெரிய குழப்பம் நமக்கு, BUT = பட் ,ஆனால் PUT = புட்.. அது ஏன்னு அமைச்சர் விளக்குவாரா? அதை நாம எப்படி படிக்கணும் என்று தான் விளக்குவாரா? வல்லினம். மெல்லினம், குறில், நெடில் என்று எல்லாமே சுலபமில்லை. ல, ள, ழ, ந, ன, ண, பற்றி சொல்லவே வேண்டாம். ஒலி , ஒளி, ஒழி, பனி, பணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி இவர்கள் பெயர் மாற்றி எழுதும் ஆங்கிலத்தை, ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டுமா? இல்லை தமிழில் / தங்கிலீஷில் என்று உச்சரிக்க வேண்டுமா? உதாரணத்துக்கு இவர் சொல்ற இந்த "thiruvallikkenni " யை எடுத்து கொள்வோம். இவர் சொல்ல வர்றது "திருவல்லிக்கேணி", ஆனால் இவர் சொல்ற ஆங்கில எழுத்துக்களை வைத்து, திறு-திரு வல்லி-வள்ளி கெனி-கேனி-கெணி-கேணி-கென்னி- கேன்னி-கெண்ணி-கேண்ணி " இவைகளை மாற்றி மாற்றி எழுதினால் (combination 2 x 2 x 8) 32 வகையாக எழுதி உச்சரிக்கலாம். (ஆனால் கணினியில் எழுதும் நாம் சில இலக்கணங்களை புகுத்தியுள்ளோம் - ஆங்கில சின்ன எழுத்துக்கும், பெரிய எழுத்துக்கும் வேறு வேறு உச்சரிப்புகளை கணினி இலக்கணமாக உள்வாங்கி செய்கிறோம். அந்த முறையில் - thiruvallikkENi அல்லது thiruvallikkaeNi என்று ஒருமித்த மொழிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதுக்கே நமக்கு மூச்சு முட்டுது என்றால் அடுத்த பள்ளம் தமிழ் இலக்கணம். தஞ்சாவூர் - எப்படி எழுதுவீர்கள்? "ஞ்" க்கிற்கு பிறகு வரும் "ச" வை "ஜ" போல ஏன் உச்சரிக்கிறோம் என்று தெரியுமா? இல்லை "ங்" - க்கிற்கு பிறகு வரும் "க" வை "ga" போல ஏன் உச்சரிக்கிறோம் என்று தெரியுமா? "ண்" க்கு பிறகு வரும் "ட" ஏன் "da" போடணும், "ta" போடக்கூடாது? - தமிழ் இலக்கணக்கடலில் ஒரு துளிக்கே இந்த திட்டம் சிதறி விடும். இந்த இரண்டு பள்ளங்களை நிரப்பாமல் இதை செயல்படுத்துவது என்பது எடுத்தோம், கவுத்தோம் என்ற பாணியில் தான் அமையும். இவையனைத்தையும் உட்படுத்தி செய்ய இயலாது தான். இருந்தாலும் இவைகளை பற்றிய சிந்தனை இல்லாமல் செய்தால் அதை குப்பையில் தான் போட முடியும்.
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202006:53:40 IST Report Abuse
மலரின் மகள்ada RAMA...
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202006:57:14 IST Report Abuse
மலரின் மகள்திருவாளர் தலபுராணத்தை தலைவராக்கி இருக்கலாமே. அரசு கவனிக்கவேண்டிய கோரிக்கை இது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X