சாக்கடை அமைக்கும் பணி தொய்வுதேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 சாக்கடை அமைக்கும் பணி தொய்வுதேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

ராமநாதபுரம்:பட்டணம் காத்தான் ஊராட்சி மருதுபாண்டியன் முதல்தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த மாதம் பாதாள சாக்கடை கால்வாய் குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களாக பணி நடைபெறாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குழியில் தேங்கியுள்ளது.துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்படுகின்றனர். இரவில் சிறுவர்கள், வயதானவர்கள் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது பட்டணம் காத்தான் ஊராட்சி செயலாளர் நாகேந்திரனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். அவர் கழிவுநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி 2 நாட்களில் மீண்டும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X