ராணுவத்தை நவீனமயமாக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
பீஜிங்: சீன அதிபர் ஜின்பிங், ராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஜின்பிங், சீன ராணுவ பயிற்சி திட்ட கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ராணுவத்திற்கு, திட்ட மேலாண்மை பயிற்சி மிகவும் முக்கியம்.ராணுவ துறையில் உள்ள பிரச்னைகள், இடர்பாடுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு,
china, Chinese President Xi Jinping, Line of Actual Control, People's Liberation Army, india china border
 சீனா, அதிபர், ஜின்பிங், உத்தரவு

பீஜிங்: சீன அதிபர் ஜின்பிங், ராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜின்பிங், சீன ராணுவ பயிற்சி திட்ட கருத்தரங்கில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ராணுவத்திற்கு, திட்ட மேலாண்மை பயிற்சி மிகவும் முக்கியம்.ராணுவ துறையில் உள்ள பிரச்னைகள், இடர்பாடுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம், ராணுவத்தின் செயல்பாடுகளை மேலும் நவீனமயமாக்க முடியும்.


latest tamil news


ராணுவ துறையில், 13வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து, 14வது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில், தீவிரமாக களமிறங்க வேண்டும்.ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு வசதியாக, பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, 150 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

லடாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினரின் மோதலால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ராணுவ நிர்வாகம் மற்றும் பயிற்சி திட்டங்களை நவீனமயமாக்க, ஜின்பிங் வலியுறுத்தியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinath - london,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-202010:42:18 IST Report Abuse
Gopinath சற்று சிந்தயுங்கள்... எல்லை கோட்டிற்க்காக எல்லை மீறுவது சரியான செயலா?. உயிர்... விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.
Rate this:
Cancel
Gopinath - london,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-202010:35:57 IST Report Abuse
Gopinath உலக நாடுகளின் ஒட்டு மொத்த சர்க்கரை உற்பத்தியை விட சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாகிப் போனதன் காரணம்... சில வளர்ந்த நாடுகள் சர்க்கரை நோயை சாதாரண ஒன்று என அறிவித்ததன் காரணம் அனைவருக்கும் ஆதார் எண் போல சர்க்கரையின் அளவு எண் என்று குழந்தை பிறந்தது முதல் அட்டை வந்த காரணம் வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அனைத்து பொருள்களுக்கும் ஒரு நாட்டையே கையேந்தி நின்றதன் காரணம் இன்னொரு அசாதாரண சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்று ஏதோ ஒரு நாட்டின் ஆராய்ச்சி குழு ஒன்று நினைத்ததன் காரணம் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியப் பொருளாக மருந்துகளும் மாத்திரைகளும் ஆகிவிட்டதன் காரணம் முகக்கவசம் கையுறை அணிந்து சென்றால் நாய்கள் நம்மை துரத்தும். ஆனால் இன்று அவைகளுக்குக் கூட நமது இன்றைய கோலம் பழகிப் போனதன் காரணம் வனத்திலுள்ள மிருகங்கள் எல்லாம் வளமாக வெளியில் நடமாடுகின்றன என்ற செய்தியின் காரணம் நம் வீட்டு நாய்க்கு தடுப்பூசி போட்ட காலம் போய், நம்மை அவைகள் தடுப்பூசி போடும் நாள் என நமக்கு ஞாபகப் படுத்தி நம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் மதுவுக்கு அடிமையானதைப் போல நாம் அனைவரும் மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டோம்.... இதன் காரணம் எங்கோ எவனோ ஒருவன் செய்கின்ற தவறுகளும்... ஆராய்ச்சி என்ற பெயரால் ஏதோ ஒரு குழு செய்கின்ற தவறுகளும் அதன் தோல்விகள் பல வடிவங்களாக வைரஸ்களாக கதிர்வீச்சின் தன்மைகளாக உருமாறி நம்மை தாக்கி.... இன்று எப்பொழுது இது மடியும்...எப்பொழுது முடிவுக்கு வரும் என்றால்... நம்மையெல்லாம் முடித்துவிட்டுத்தான் செல்லுமா? அல்லது இதன் மன உளச்சலில் மாண்டுதான் போவோமா? எது எப்படியோ நம்பிக்கை என்ற ஒற்றை சொல்லைத் தவிர நம்மிடம் ஒன்றும் இல்லை நாட்களை நகர்த்துவோம் நம்பிக்கையுடன் நானும் உங்களில் ஒருவனாக.... எனது ஏக்கங்களின் பக்கமாக பதிவிடுகிறேன்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-202017:46:23 IST Report Abuse
Tamilan இது அவரவர்கள் விருப்பம். எனினும் இதனால் பாதிக்கப்படுவது இந்தியா போன்ற அண்டை நாடுகள்தான். இவர்களை உலகமுழுவதும் கொள்ளைடித்து, உலகையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு நூற்றுக்கணக்கான டிரில்லியன் டாலர்கள் சேர்க்க விட்டது உலக நாடுகளின் இயலாமை. இப்போது சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் இயலாமையால், உலகமே பரிதவிக்கிறது. பல டிரில்லியன் டாலர்கள் வருமானம் இழந்து நிற்கிறது. உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதியில் நிற்கிறார்கள் . நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நிலையிழந்து கிடக்கிறார்கள் . ஒட்டுமொத்த உலகமும் முடங்கி போயிருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணமான சீனாதான் முக்கிய பொறுப்பேற்கவேண்டும் . இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நினைத்தால், இவ்வளவு நாட்கள் உலக அரங்கில் கொள்ளையடித்ததில் பாதிக்கும் மேல் சீனா இழக்க வேண்டிவரும் . அப்படி ஏற்பட்டுவிட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து உலகை திசை திருப்ப தான் இப்படி ஒரு நாடகம் ஆட வேண்டிய கட்டாயாம் சீனாவுக்கு. அதைத்தான் காலம் காலமாக பக்கத்துக்கு நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் செய்துவருகின்றன. தீபத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதுதான் சீனாவுக்கு நல்லது. அப்படி செய்யாத வரை சீனாவுக்கும், சீனாவை ஊக்குவிக்கும் உலக நாடுகளுக்கும் , சீனாவின் வாலை பிடித்து அலையும் மற்ற மதவாத நாடுகளுக்கும் இதுதான் நிலை. இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X