செலவைக் குறையுங்கள்: வங்கிகளுக்கு அரசு உத்தரவு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை வங்கிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து,
bank, public sector bank, banking, வங்கி, அரசு, உத்தரவு, செலவு, குறைப்பு

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை வங்கிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, விரிவான அறிவுறுத்தலை, மத்திய அரசின், நிதி சேவைகள் துறை, அனைத்து பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது, பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ஒரு காரியம் தான். அண்மையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் உயர் நிர்வாகிகளுக்கு, விலை உயர்ந்த, மூன்று புதிய, 'ஆடி' கார்களை வாங்கியது.


latest tamil news


கொரோனா தாக்கத்தால் நாடே பாதிக்கப்பட்டு, தொழில்கள் எல்லாம், நிதி ஆதாரங்கள் இன்றி தவித்துக்கொண்டிருந்த நிலையில், பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆடம்பர கார்களை வாங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. நாடே முடக்கப்பட்டிருந்த சமயத்தில், கிட்டத்தட்ட, 1.30 கோடி ரூபாய் செலவில், ஆடம்பர கார்களை வங்கி வாங்கியது, அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.

இந்நிலையில்தான், மத்திய அரசு, அனாவசிய ஆடம்பர செலவுகளை குறைக்கும்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
19-ஜூன்-202021:32:29 IST Report Abuse
m.viswanathan வங்கிகளில் பணி புரிபவர்களை 40 வயது வரை பணி செய்த பின்பு , மீதமுள்ள 18 ஆண்டுகள் தனியார் துறையில் பணிக்கு மாறுதல் செய்யும் படி சட்ட திருத்தம் வர வேண்டும் . வேலை செய்வது என்றால் என்ன என்பது புரியும் , எனக்கு கணக்கு உள்ள ஒரு வங்கியில் form 16 A கேட்டதற்கு PAN நம்பர் கேட்டு விட்டு , வேறொருவர் PAN எண் கொண்ட படிவத்தை இரண்டு காலாண்டிற்கும் ,மீதி இரண்டு காலாண்டிற்கும் என்னுடைய கணக்கின் பிரிண்ட் கொடுத்தார்கள் . என்ன இது என் நம்பர் இல்லையே , வேறொருவர் detail கொடுக்கிறீர்கள் என கேட்டவுடன் , சமாளித்து , என்னுடையதை கொடுத்தார்கள் . இந்த லட்சணத்தில் உள்ளது இவர்கள் பணி செய்யும் முறை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-ஜூன்-202017:53:30 IST Report Abuse
Natarajan Ramanathan தீபாவளி வந்தாலே அனைத்து அரசு துறைகளும் வங்கிகளிடம் இனாம்... எடுப்பதை நிறுத்தினாலே பல நூறு கோடிகள் பணம் வங்கிக்கு மிச்சமாகுமே.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-202016:56:25 IST Report Abuse
g.s,rajan The Government waive the loans in Several thousand crores to Corporates but insists the banks to reduce the expitures is highly Idiotic, those who work could earn the profit can also enjoy the minimum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X