அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பல்டி' அரசாக மாறிய பழனிசாமி அரசு: ஸ்டாலின் தாக்கு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, tamil nadu politics, tn news, dinamalar news, DMK president M K Stalin
திமுக,ஸ்டாலின்

சென்னை: தமிழ் உச்சரிப்பு அரசாணையை, தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதற்கு, 'பழனிசாமி அரசு, பல்டி அரசாக மாறியுள்ளது' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள, ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே, ஆங்கிலத்தில் உச்சரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்பப் பெறுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நிபுணர்கள் உதவியுடன், தமிழ் உச்சரிப்புக்கேற்ப, சரியான ஆங்கில வார்த்தையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில், புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


latest tamil news




இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு. முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா? எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-202015:21:12 IST Report Abuse
madhavan rajan இதனால் இவர் என்ன சொல்கிறார் என்றால் இவர் ஏதாவது அரசின் செயலை குறை கூறினால் அதை அரசு சரி செய்யக்கூடாது. சரி செய்தால் பல்டி அரசாகிவிடும். இவர் குறை கூறுவது சும்மா தமாஷாக எடுத்துக்கொள்ளவேண்டும் அதன்மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று தெளிவுபடுத்துகிறார்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-ஜூன்-202006:18:10 IST Report Abuse
 Muruga Vel நீங்களும் என்னென்னமோ அறிக்கை விட்டு பாக்குறீங்க .. பழனி எந்த பிரச்னையும் இல்லாம ஆட்சி காலத்தை முழுசா கழிக்க போறார் ..இந்த மாதிரி குண்டக்க மண்டக்க அறிக்கை விட்டா திரும்ப பழனி முதல்வரா வர சான்ஸ் இருக்கு
Rate this:
Cancel
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202019:12:23 IST Report Abuse
Pa.Arumugam எங்க தலீவரே ...உங்கள் அறிக்கை அக்கப்போர் பற்றி தினமும் வாசகர்கள் கழுவி-கழுவி ஊத்துவத்தைப்பற்றி பீகார் காரருக்கு புரியாமல் இருக்கலாம் ..இங்க இருக்கும் ஒரு அல்லக்கைகூடவா உங்களுக்கு விளக்கம் கொடுக்க முன்வரவில்லை ..வாசகர்கள் விமர்சனங்கள் உங்களுக்கு புரியாது என்பது வேறு விஷயம்... கொஞ்சம் சூதகமா நடந்துகொள்ளுங்க தலைவரே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X