பொது செய்தி

இந்தியா

சீன தொலை தொடர்பு சாதனங்களை பி.எஸ்.என்.எல்., தவிர்க்க திட்டம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி; லடாக்கில், சீன ராணுவத்தின் அட்டூழியத்தால் இந்திய ராணுவ வீரர்கள், 20 பேர் பலியானதை தொடர்ந்து, சீனாவின் தொலை தொடர்பு சாதனங்களை, பி.எஸ்.என்.எல்., பயன்படுத்த, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இறக்குமதி இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' தொழில்நுட்பத்தில்,
bsnl, chinese telecom, Department of Telecom, Bharat Sanchar Nigam Ltd, Galwan Valley, சீனா, தொலை தொடர்பு, சாதனங்கள், பி.எஸ்.என்.எல்.,  தவிர்க்க திட்டம்

புதுடில்லி; லடாக்கில், சீன ராணுவத்தின் அட்டூழியத்தால் இந்திய ராணுவ வீரர்கள், 20 பேர் பலியானதை தொடர்ந்து, சீனாவின் தொலை தொடர்பு சாதனங்களை, பி.எஸ்.என்.எல்., பயன்படுத்த, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


இறக்குமதி

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' தொழில்நுட்பத்தில், மேம்படுத்தப்பட்ட தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளது. இச்சேவைக்கான கட்டமைப்பு சாதனங்களை, ஹூவாய் போன்ற சீன நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஏற்கனவே, ஹூவாய் நிறுவனத்தின் தொலை தொடர்பு சாதனங்கள், உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்தினரின் அத்துமீறலும், அதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பும், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல், சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையும், சீன நிறுவனங்களின் தொலை தொடர்பு சாதனங்களை, கொள்முதல் செய்ய வேண்டாம் என, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட முடிவு செய்துள்ளது. அதுபோல, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும் என, தெரிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


உத்தரவிடவில்லை

இதற்கிடையே, 'அரசியல் பிரச்னையை, வர்த்தகத்துடன் இணைக்கக் கூடாது' என, பார்தி ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய, இந்திய மொபைல்போன் சேவை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, சீன நிறுவனங்களின் தொலை தொடர்பு சாதனங்களை வாங்கக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிடவில்லை. அப்படி உத்தரவிட்டால், அதை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றும் என, கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news
முன்னணியில் நான்கு சீன நிறுவனங்கள்

இந்தியாவில், 'ஸ்மார்ட்போன்' விற்பனையில், முதல் ஐந்து இடங்களில், ஜியோமி, விவோ, சாம்சங், ரியல்மி, ஒப்போ ஆகியவை இவற்றில், கொரியாவின் சாம்சங் தவிர்த்து, இதர நான்கும் சீன நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்கு, 76 சதவீதமாக உள்ளது.


ஒப்பந்தம் ரத்து: ரயில்வே முடிவு

இந்திய ரயில்வே, கான்பூர் - முகல்சராய் இடையிலான, 471 கி.மீ., சரக்கு ரயில் தடத்தில், 471 கோடி ரூபாய் முதலீட்டில், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பணிகளை மேற்கொள்ள, சீனாவின், பீஜிங் தேசிய ரயில்வே ஆய்வு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு முடிக்க வேண்டிய பணியில், 20 சதவீத பணி மட்டுமே நடைபெற்றுள்ளதால், சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய, ரயில்வே முடிவு செய்துள்ளது.


371 பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

சீனாவில் இருந்து, பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு கருவிகள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் உட்பட, 9.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 371 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202019:25:19 IST Report Abuse
ஆப்பு இவிய்ங்க ஆட்சியில் ஏகப்பட்ட டேமேஜ் ஆயாச்சு.
Rate this:
Cancel
Nathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202016:39:06 IST Report Abuse
Nathan நீங்கள் சீன பொருட்களை தவிர்ப்பது நன்று ஆனால் பட்டேல் சிலை கூட சீன தயாரிப்பு தான். இது மோடியின் சாதனை
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-202014:17:25 IST Report Abuse
Ramona BSNL அரசு நிறுவனம் என்று அதில் இணைப்ப பெற்றால் அவங்க மலிவு விலையில் இந்தியாவிற்க்கு என்று தயாரிக்கும் மோடங்களை இன்டர்நெட் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு தலையில் கட்டுகிறார்கள், ஏன் இப்படி என்றால் இதுதான் அரசாங்கம் கொடுக்கும் பொறுள் வேண்டும் என்றா கனெக்ச்சன் கொடுக்கிறோம் .என்று பதில் வறுகிறது.அந்த மலிவு விலை பொருட்களை ஒரு கள்ள மார்க்கெட் கும்பல் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட டெண்டரில் ஏலம் எடுத்து நம் தலையில் கட்டுகிறார்கள். இப்படி சீனா எதாவது சண்டை போட்டா உடனே நம் மக்களுக்கு தேசபற்று அதிகமாக இருக்கும், சில நாட்கள் கழித்து இந்த உணர்ச்சி மறைந்த, அதை மறந்துவிட்டு இதே பொறுட்க்கள் நமக்கு வருகிறதே இதுதான் மிகப்பெரிய வேதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X