பொது செய்தி

இந்தியா

மின் வாகன மையமாக மாறும் இந்தியா: நிதின் கட்காரி நம்பிக்கை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Nitin Gadkari, Electrical Vehicle, Manufacturing Hub, India, Coronavirus, Corona, Covid-19, நிதின் கட்காரி, மின்சார வாகனம், உற்பத்தி மையம், இந்தியா

புதுடில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'கோவிட்-19க்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் மின்சார வாகனத் திட்டம்' என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும். அதன் உற்பத்தி மையமாக மாறும். இத்துறைக்கு முடிந்த அளவு சலுகைகள் அளிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் உலகம் இனி ஆர்வம் காட்டவில்லை, இது இந்தியத் தொழிலுக்கு வணிக மாற்றத்தை எடுக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். பெட்ரோலிய எரிபொருள் குறைந்த அளவில் கிடைப்பதால், மலிவான மாற்று எரிசக்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மின்சாரம் மற்றும் உயிரி எரிபொருள்கள் நல்ல வாய்ப்பாக உள்ளது.
பழைய வாகனங்கள் ஒழிக்கும் கொள்கையைத் தொடர்வது, வாகன உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும். பொருளாதார நெருக்கடியிலும், நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையுடன், வாகனத்துறையால் நல்ல சந்தை வாய்ப்புகளைப் பெறமுடியும். வாகனத்துறை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
19-ஜூன்-202016:47:01 IST Report Abuse
Selvaraj Thiroomal எந்த அடிப்படையில் நம்பிக்கை தெரிவிக்கிறார் என்று நமக்கு புரியவைப்பது அவரது கடமை. லித்தியம் பாட்டரிகளே இதுவரை அறியப்பட்ட முக்கிய சாதனம் என்ற அடிப்படையில் லித்தியம் இந்தியாவில் கிடைப்பதில்லை. குறைந்த அளவில் உள்ளதாக தகவலே உள்ளது. சூரிய ஆற்றலை வாங்கும் சோலார் தகடுகளும் அதன் மூலப் பொருட்களையும் இந்தியா இறக்குமதி சார்ந்தே உள்ளதே. பிஎஸ்6 வாகனங்களே இப்போதுதான் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 தரம் மாற்ற போட்ட மூலதனத்தையே தயாரிப்பாளர்கள் எடுத்திருக்க மாட்டார்கள். அடுத்த தொழிற்நுட்பம் தயாரிப்பாளருக்கும் மக்களுக்கும் அனைத்திலும் பயனும் நியாயமும் உள்ளதாக அமைய தீர்க்கமான இணைந்த திட்டமிடல் தேவை.எத்தனால் கலப்பு எரிபொருளை கொடுப்பதில் இன்றுவரை சிக்கல் நீடிக்கிறது.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
19-ஜூன்-202015:13:42 IST Report Abuse
Rameeparithi மின் வாகனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு தீவிரமாய் தயார் படுத்தி, உற்பத்தியாளருக்கும் மற்றும் பயனாளிகளுக்கு சலுகை வழங்கினால் பெரிய மாற்றத்தை எதிர் பார்க்கலாம் கண்டிப்பாக அந்நிய செலாவணியை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை மாறும்
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202014:34:43 IST Report Abuse
SAPERE AUDE மின்வாகனங்கள் மக்கள் உபயோகத்தில் வர இன்னமும் பல வருஷங்களாகும். மின்சாரத்தை சேமித்து வாகனங்களை ஓட்ட மின்கலங்கள் (பாட்டரி) தேவை. இப்போது உள்ள நிலையில் அதன் விலை மிகவும் அதிகம். அவைகளில் சார்ஜ் செய்து சேகரிக்க வேண்டிய உபகரணங்கள் நிறைய வேண்டும்.மேற்கத்திய நாடுகளிலேயே இது இன்னமும் சோதனை நிலையில்தான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X