பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3.50 கோடியில் கோவில் வளர்ச்சி பணிகள்: பூமி பூஜையில் அமைச்சர் தகவல்

Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கரூர்: ''கரூர், வெண்ணைமலை முருகன் கோவிலை சுற்றிலும், 3.50 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கரூர், காதப்பாறை பஞ்., வெண்ணைமலை முருகன் கோவிலை சுற்றி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: இந்த கோவிலை சுற்றி சாலை அமைத்து, நடைபாதை அமைத்துத்தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன. அதில்,1.57 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை, பேவர்பிளாக் நடைபாதைகள்; 30.85 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம்; புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, 14.59 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி; 11.56 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் ஓய்வுக்கூடம்; 1.32 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் அன்பழகன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, காதப்பாறை பஞ்., தலைவர் கிருபாவதி, கூட்டுறவு சங்கபிரதிநிதி கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202015:15:13 IST Report Abuse
  karthik மூன்று அரை கோடி ஸ்வாஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X