பொது செய்தி

தமிழ்நாடு

நங்காஞ்சிஆறு மாசுபடுவதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளபட்டி பகுதி கழிவுநீர், நங்காஞ்சி ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, வடகாடு கிராமப் பகுதியில் உள்ள சிற்றாறுகளின் தண்ணீர், பரப்பலாறு அணையில் தேங்கி, சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு உருவாகிறது. விருப்பாச்சி கிராமத்திற்கு அருகில் தாழையூத்து என்ற இடத்தில் சிறு அருவியாக விழுந்து, கோவிந்தாபுரம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஊர்களின் வழியாக பாய்ந்து நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. நங்காஞ்சிஆற்றிற்கு இடையகோட்டை அருகே, 2007ம் ஆண்டு, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகளான, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் தடுப்பணை கட்டியதால், ஆற்றில் நீர்வரத்து குறைந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதி தடுப்பு அணைகள் நீர்வரத்து இன்றி வறண்டன. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து குடிநீருக்கே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் கழிவுநீரும் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளப்பட்டி பகுதி கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுவதால் ஆறு மாசடைந்தது கருவேல முட்புதர்கள் முளைத்துள்ளன. இதை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடைக்காரர்கள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, குடிநீருக்காக வீடுகளில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே, பள்ளப்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, அருகில் உள்ள நங்காஞ்சி ஆற்றின் தடுப்பணையில் தேக்கினால்,அங்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X