பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையை எப்ப சார் திறப்பீங்க? விவசாயிகள், பொதுமக்கள் கேள்வி

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

கரூர்: கடந்த, இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள உழவர் சந்தைகள் எப்போது, திறக்கப்படும் என, பொதுமக்கள், விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. கரூரில், திருச்சி சாலை மற்றும் வெங்கமேட்டில், உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்து, 34 வகையான தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உழவர் சந்தைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. கரூரில் காமராஜ் தினசரி மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. சிறிய சந்தைகளும் செயல்பட துவங்கியுள்ளன. இதனால், உழவர் சந்தைகளையும் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது: உழவர் சந்தையில் அதிகாரிகள் நாள்தோறும் நிர்ணயம் செய்யும் குறைந்த விலையில், காய்கறிகள் விற்கப்படுகின்றன. தற்போது, இரண்டரை மாதங்களாக உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து, காய்கறிகளை வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. இதனால், உழவர் சந்தைகளையும் திறக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X