பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை இடமாற்றம்: தொழிலாளர்கள் பாதிப்பு

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் குறுகிய இடத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில், ஜவுளி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில் உள்ளனர். சில நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மூலம் மருத்துவ வசதி செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கரூர்-வாங்கல் சாலை புதுத்தெருவில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. தொழில் மிகுந்த நகராக கரூர் வளர்ந்து வருவதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள, குறுகிய கட்டடத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது.


இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது: வாங்கல் சாலையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை சிறிய இடத்தில்தான், ஏற்கனவே இயங்கி வந்தது. அதில், வெளிப்புற நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர். உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டுமானால், திருச்சி அல்லது சேலத்துக்கு செல்ல வேண்டும். இதனால், கரூரில் படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏற்கனவே இயங்கி வந்த இடத்தை விட, சிறிய இடத்துக்கு மருத்துவமனையை மாற்றி விட்டனர். அதில், காலை, 7:00 முதல், 10:30 மணி வரை, மாலை, 4:00 முதல், 6:30 மணி வரை வெளி நோயாளியாக மட்டும் சிகிச்சை பெற முடியும். அதிகளவில் நோயாளிகள் வரும் போது, வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், இடவசதி கொண்ட பகுதிக்கு மருத்துவமனையை மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X