பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சமின்றி தொழிலாளர்கள் பயணம்

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கொரோனா அச்சமின்றி கட்டுமான தொழிலாளர்கள் ஒரே வாகனத்தில் அருகருகே அமர்ந்து பயணிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், தாலுகா அலுவலக அதிகாரிகள், மருத்துவ குழுவினர், போலீசார் இரவும் பகலுமாக பாடுபட்டு வருகின்றனர். முகக் கவசம் அணியாமல் கூட பொதுமக்கள் அலட்சியமாக சென்று வருவதை காண முடிகிறது. கலெக்டர் உத்தரவுப்படி, விதிமுறையினை பின்பற்றாத கடையினர் பலருக்கும் நேற்றுமுன்தினம் இரவு வரை, 17 ஆயிரத்து, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, கட்டுமான தொழிலாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஒரே வாகனத்தில் அருகருகே அமர்ந்து பயணிக்கின்றனர். சம்பந்தப்பட்ட கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X