பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், குமரமங்கலம், பெரியமணலி பகுதிகளில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா நிவாரணமாக, மாநில அரசு, 5,000, மத்திய அரசு, 7,500 ரூபாய் என, குடும்பம் ஒன்றுக்கு மாதம், 12 ஆயிரம் ரூபாய், ஆறு மாத காலத்திற்கு வழங்க வேண்டும். ரேஷன் கடை முறைகேடுகளை ஒழிக்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்கட்டண குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். விவசாயம் சிறு,குறு தொழில்களை பாதுகாக்க, 10 லட்சம் ரூபாய் வரை நிபந்தனையின்றி மானிய கடன் வழங்க வேண்டும். கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டணம் இல்லாமல் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சுந்தரம், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X