ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Added : ஜூன் 19, 2020
Share

நாமக்கல்: ஆனி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல், காந்தி நகர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. செவ்வரளி, மனோரஞ்சிதம், மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.* நாமக்கல், கூலிப்பட்டி கந்தகிரி பழனி ஆண்டவர் கோவிலில், மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது.


* நாமக்கல்-கடைவீதி சக்தி விநாயகர் கோவில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவையால் அபி?ஷகம் செய்யப்பட்டது. சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


* நாமக்கல்-சேலம் சாலை கருங்கல்பாளைம், கரையான்புதூர் கருமலை, தண்டாயுதபாணி கோவிலில் அபி?ஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆகம விதிப்படி அர்ச்சகர்கள், பூசாரிகள் மட்டும் சிறப்பு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தவாறே சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X