பொது செய்தி

தமிழ்நாடு

அசோலா திட்ட நிதி வழங்க விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: 'கால்நடைகளுக்கு பசுமை தீவனம் வழங்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வழங்கி உதவ வேண்டும்' என, குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கால்நடை மருத்துவர் சென்றாயன் கூறியதாவது: அசோலா விதைகள் கால்நடை மருத்துவமனைகளில் பெற்று, தொட்டியில் தண்ணீருடன் சாணம் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் சேர்த்து அசோலா விதைகளை கலந்து விடவேண்டும். இதிலிருந்து, 15 நாட்களில் உருவாகும் பசுமை தீவனங்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் ஆடு, கோழி, மாடுகளுக்கு கொடுத்தால், ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் படைவீடு பெருமாள் கூறியதாவது: ஊரடங்கிற்கு முன், பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில், அசோலா திட்டத்திற்கு தீவனம் உருவாக்கும் தொட்டி அமைப்பதற்காக விவசாயி ஒருவருக்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆடு, மாடு, கோழி ஆகியவை ஆரோக்கியமாக வாழ அசோலா தீவனம் உருவாக்க நிதி உதவியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X