பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டுக்கிளி தாக்குதல்: காபி வாரியம் அறிவுரை

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

ராசிபுரம்: கொல்லிமலையில், காபி தோட்டங்களில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, காபி வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொல்லிமலை, காபி வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள காபி தோட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை, புள்ளி வெட்டுக்கிளி அல்லது கோஸ்ட் வெட்டுக்கிளி என அழைக்கப்படுகிறது. தற்போது காபி தோட்டங்களில் உள்ள வெட்டுக்கிளிகள் முதிர்வு அடையாமல் இறகுகள் இன்றி குழுக்களாக காணப்படுகின்றன. அவற்றை பூச்சுவலை, வீச்சுவலை மூலம் பிடித்து எரிக்கலாம் அல்லது பூச்சி கொல்லி திரவத்தில் மூழ்கடித்து அழிக்கலாம். முதிர்ச்சி அடையாத பூச்சிகளை கட்டுப்படுத்தாவிட்டால் அவை பறக்கும் நிலை அடைந்து பெருகி, அதிக பரவலை ஏற்படுத்தும். எனவே, இளம்பூச்சிகளை அழித்துவிட வேண்டும். தேவைப்படின், குயினாஸ்பாஸ் பூச்சி கொல்லியினை, இரண்டு லிட்டர் அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காபி செடிகள், புல் வெளிகள் மீதும் தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளி பரவலை கட்டுப்படுத்தலாம். விபரங்களுக்கு, கொல்லமலை காபி வாரியத்தை, 04286 -247567 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X